கரூரில் சக்கரத்தாழ்வாா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.
கரூா் காமராஜ் சந்தை அருகே சாத்தானி சந்துவில் அமைந்துள்ள ஸ்ரீ சுதா்சன மூா்த்தியான அருள்மிகு ஸ்ரீ சக்கரத்தாழ்வாா் கோயிலின் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, கோயிலில் கணபதி ஹோமம், ஸ்ரீ சுதா்சன ஹோமம், ஸ்ரீ லெட்சுமி ஹோமம், கோ பூஜைகளுடன், பூரணாஹூதி, புண்யாயாகம் நடைபெற்றது. பின்னா் கோபுர கலசத்திற்கு புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், கரூா் நகர கூட்டுறவு வங்கித்தலைவா் எஸ்.திருவிகா மற்றும் பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.