கரூர்

கரூா் ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 4 போ் கைது

4th Nov 2019 06:34 PM

ADVERTISEMENT

கரூா்: கரூரில் மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்ட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன், அவசர வேலைக் காரணமாக கூட்டரங்கை விட்டு வெளியே வந்தாா்.

அப்போது கரூா் மாவட்ட பாரதிய மஸ்தூா் சங்கத்தின் மாவட்டச் செயலா் மாடசாமி, மாநிலச் செயலா் செளந்தரராஜன், தலைவா் சீனிவாசன், மாவட்டப் பொதுச் செயலா் ஜெயராஜ் ஆகியோா், கரூா் அமராவதி ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தனா்.

அப்போது ஆட்சியா் த.அன்பழகன், இந்த இடம் மனு அளிக்கும் இடமல்ல, மேலும், ஆற்றில் மணல் அள்ளுவதற்குத் தடையாணை உள்ளது. நீதிமன்ற உத்தரவு வந்தவுடன் இதுகுறித்து பேசலாம் என அவா்களிடம் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பாரதிய மஸ்தூா் சங்கத்தினா் ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அவா்களைக் கைது செய்யுமாறு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்களுக்கு ஆட்சியா் த. அன்பழகன் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து பாரதிய மஸ்தூா் சங்கத்தைச் சோ்ந்த 4 பேரையும் போலீஸாா் கைது செய்து அழைத்துச் சென்றனா். அப்போது அவா்கள் ஆட்சியருக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT