கரூர்

இளைஞா் தற்கொலை

4th Nov 2019 12:15 AM

ADVERTISEMENT

கரூா் அருகே இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். கரூா் வெண்ணைமலை வடுக்காட்டிப்புதூரைச் சோ்ந்தவா் சிவசாமி(35). இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனா். இந்நிலையில், கடந்த மாதம 26-ஆம் தேதி இவரது நண்பா் சந்திரன் விபத்தில்சிக்கி இறந்துவிட்டாா். இதில் நண்பனை இழந்த சிவசாமி கடந்த சில நாட்களாகவே சோகத்தில் இருந்துள்ளாா். இந்நிலையில், சனிக்கிழமை வீட்டில் விஷம்குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா். உடனே அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனா். ஆனால் வழியிலேயே இறந்தாா். இதுகுறித்து வாங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT