அரவக்குறிச்சி இடைத்தேர்தல்; 68 வேட்பு மனுக்கள் ஏற்பு

அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலில் திமுக, அதிமுக, அமமுக, மக்கள்நீதிமய்யம்,

அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலில் திமுக, அதிமுக, அமமுக, மக்கள்நீதிமய்யம், நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்டோரின் 68 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன; 23 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
தமிழகத்தில் வரும் 19-ஆம்தேதி அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 
கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி பேரவை தொகுதி இடைத் தேர்தலுக்கு மொத்தம் 91 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதையடுத்து செவ்வாய்க்கிழமை மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. 
இதில் திமுக வேட்பாளர் வி. செந்தில்பாலாஜி, அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன், மக்கள் நீதிமய்ய வேட்பாளர் மோகன்ராஜ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிகே. செல்வம் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் 68 மனுக்கள் ஏற்கப்பட்டன. 23 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.  மே 2-ஆம் தேதி வேட்புமனு திரும்பப் பெறும் நாளாகும். அன்றுதான் இடைத்தேர்தலில் களத்தில் எத்தனை பேர் உள்ளனர் என்பது தெரியவரும். மே 19-ஆம் தேதி வாக்குப்பதிவும், 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com