தோகைமலை ஒன்றியத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது.
கழுகூர் ஊராட்சிக்குட்பட்ட உடையாபட்டி ஊராட்சி அலுவலகம் அருகே நடந்த கூட்டத்திற்கு ஒன்றியப் பணி மேற்பார்வையாளர் பத்மா தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் முருகானந்தம் தீர்மானங்களை வாசித்தார். இதேபோல் கூடலூர் ஊராட்சி பேரூரில் நடந்த கூட்டத்திற்கு சாலை ஆய்வாளர் விஜயராணி தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் போதுமணி தீர்மானங்கள் வாசித்தார். ஆர்டிமலையில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றியப் பணியாளர் சார்லிபெட்ரிக்ஆல்வின் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் செந்தில்குமார் தீர்மானங்களை வாசித்தார். இதேபோல் புழுதேரி, பாதிரிபட்டி உள்பட 20 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. சிறப்பு கிராமசபை கூட்டத்தை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) லதா, ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வை செய்தனர். இதில் குடிநீர், புதிய குடியிருப்புகள் போன்ற பல்வேறு கோரிக்கை குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.