கரூர்

நுண்ணீர் பாசனத் திட்டத்தில் சேர விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

31st Jul 2019 10:17 AM

ADVERTISEMENT

நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் பயன்பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 
பாசன நீரை சேமிக்க உதவும் பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டுமே சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும்,  இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கப்படுகிறது. விவசாயிகள் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டியை தமிழக அரசே ஏற்றுக் கொண்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் (2019-20) வேளாண்மை துறை மூலம் 1500 ஹெடேருக்கு ரூ.6.49 கோடி நிதி ஒதுக்கீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், கரும்புப் பயிருக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.97,134-ம் மற்றும் இதர விவசாயிகளுக்கு ரூ.75,452 -ம் வழங்கப்படுகிறது. மேலும், தென்னை பயிருக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.27,770-ம் மற்றும் இதர விவசாயிகளுக்கு ரூ.21,572-ம் வழங்கப்படுகிறது.  
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ஆதார் அட்டை, அடங்கல், கணிணி சிட்டா, நில வரைபடம், சிறு, குறு விவசாயிகளாக இருப்பின் வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட சான்று ஆகிய ஆவணங்களுடன் தாங்களாகவே w‌w‌w.‌t‌n‌h‌o‌r‌t‌i​c‌u‌l‌t‌u‌r‌e.‌i‌n​> ‌g‌o‌v.‌i‌n/‌h‌o‌r‌t‌i/‌m‌i‌m‌i‌s  என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் .
 

ADVERTISEMENT
ADVERTISEMENT