மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கரூரில் கையெழுத்து இயக்க தெருமுனைப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரூர் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாந்தோன்றிமலை கடைவீதியில் நடைபெற்ற நிகழ்வுக்கு, நகரச் செயலர் எம்.ஜோதிபாசு தலைமை வகித்தார். கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.வரதராஜன் முதல் கையெழுத்திட்டு, பிரசார இயக்கத்தைத் தொடக்கி வைத்தார்.
கட்சியின் மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, மாவட்டச் செயலர் கே.கந்தசாமி உள்ளிட்ட பலர் தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றனர்.