கரூர்

கலை இலக்கியப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

27th Jul 2019 08:48 AM

ADVERTISEMENT

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கலை இலக்கியப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இதுகுறித்து  தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் முனைவர்.
ப.அன்புச்செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  பள்ளி, கல்லூரி மாணவர்களின் பேச்சு, படைப்புத் திறன்களை வெளிக்கொணரும் வகையில், தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் ஆண்டுதோறும் மாவட்டம் வாரியாக  கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நிகழாண்டில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் ஆக. 7- ஆம் தேதி கரூர் காந்திகிராமம் புனித தெரசா மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் ஆக.9-ஆம் தேதி  தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி கலையரங்கிலும் நடைபெற உள்ளன. 
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளிள் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களுக்கான பரிசுத் தொகை ரூ.10,000, ரூ.7,000, ரூ.5,000 என்ற அடிப்படையில் வழங்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT