ஆடி இரண்டாவது வெள்ளியையொட்டி, கரூர் ஆதிமாரியம்மன் கோயிலில் காய், கனி அலங்கார வழிபாடு நடைபெற்றது.
கரூர் தாந்தோணிகுடித்தெருவிலுள்ள ஆதிமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு காய், கனிகளால் ஆன அலங்கார வழிபாடு நடைபெற்றது.
இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.