கரூர்

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது

22nd Jul 2019 09:56 AM

ADVERTISEMENT

கரூரில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.
 கரூர் திருமாநிலையூரைச் சேர்ந்தவர் அறிவழகன்(33). இவரது மனைவி பவானி(27). இவர்களுக்கிடையே கடந்த சில வாரங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
 இந்நிலையில் சனிக்கிழமை இரவும் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டபோது, அறிவழகன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவியை வெட்டினாராம். 
இதில் காயமடைந்த பவானியை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து பவானி அளித்த புகாரின் பேரில், பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து அறிவழகனை கைது செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT