கரூர்

கரூர் அருகே  கழுத்தறுத்து பெண் கொலை

22nd Jul 2019 09:53 AM

ADVERTISEMENT

கரூர் அருகே கழுத்தறுத்து பெண் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கரூர் அருகிலுள்ள கிடைக்காரன்பாளையத்தில் இருந்து ராக்கியாக்கவுண்டன்புதூர் செல்லும் சாலையில், ஆலங்காடு என்ற பகுதியில்  ஞாயிற்றுக்கிழமை காலை 35 வயது மதிக்கத்தக்க பெண் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.
 இதைகண்ட அப்பகுதியினர் தென்னிலை போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 
போலீஸார் அப்பகுதிக்குச் சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து, கொலை செய்யப்பட்ட பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், தகாத உறவில் கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT