கரூர் மின்விநியோக வட்டத்துக்கு உள்பட்ட வேப்பம்பாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் புதன்கிழமை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள்: சஞ்சய் நகர், வேலுசாமிபுரம், அரிக்காரம்பாளையம், கோதூர், வடிவேல்நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டான்கோவில், விஸ்வநாதபுரி, மொச்சக் கொட்டம்பாளையம், சத்திரம், பவித்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என கரூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எஸ். செந்தாமரை தெரிவித்துள்ளார்.