கரூர்

அடையாளம் தெரியாத இளைஞர் சடலம் மீட்பு

12th Jul 2019 07:22 AM

ADVERTISEMENT

செம்மடையில் சாலையோரம் அடையாளம் தெரியாத இளைஞர் சடலம் கிடந்தது குறித்து வாங்கல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 கரூர் வெங்கமேட்டை அடுத்த செம்மடை ரவுண்டானா பகுதியில் கரூர் - சேலம் புறவழிச்சாலையோரம் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் புதன்கிழமை இரவு இறந்து கிடந்துள்ளார். இதுதொடர்பாக மண்மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன்(36) வாங்கல் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று இளைஞரின் சடலத்தை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிந்து இறந்தவர் ஆதரவற்ற நிலையில் திரிந்தவரா என விசாரிக்கின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT