கரூர்

கத்தியைக் காட்டி இளைஞரிடம் பணம் பறித்த மூன்று பேர் கைது

2nd Jul 2019 09:19 AM

ADVERTISEMENT

கரூரில் கத்தியைக் காட்டி இளைஞரிடம் பணம் பறித்த மூன்று பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
கரூரை அடுத்த பஞ்சமாதேவியைச் சேர்ந்த பெரியசாமி மகன் கார்த்திக் (24). இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு வெங்கமேடு ரயில்வே மேம்பாலம் பகுதியில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த வெங்கமேடு இந்திரா நகரைச் சேர்ந்த சூரியா (22), வெள்ளியங்கிரி (21), கவியரசு (19) ஆகியோர் கார்த்திக்கிடம் கத்தியைக்காட்டி மிரட்டி ரூ.500 பணம் பறித்தார்களாம். இதுதொடர்பாக கார்த்திக் அளித்த புகாரின்பேரில் வெங்கமேடு போலீஸார் வழக்குப்பதிந்து சூர்யா உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT