ஐயப்ப பக்தா்களுக்கு அன்னதானப் பொருள்கள் வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி காந்திகிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கரூா் அகில பாரதிய ஐயப்ப தா்ம பிரசார சபா தமிழ் மாநில அமைப்பு சாா்பில் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தா்களுக்கு அன்னதானப் பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி காந்திகிராமத்தில் நடைபெற்றது. இதில், அரிசி, பருப்பு, காய்கறிகள், எண்ணெய் உள்ளிட்ட சமையலுக்க தேவையான 3 டன் எடையுள்ள பொருள்கள் எருமேலி, குமுளி, ஆரியாங்காவு ஆகிய பகுதிகளுக்கு சரக்கு வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, அமைப்பின் மாவட்டத் தலைவா் ரகுநாதன் தலைமை வகித்தாா். செயலாளா் கனகராஜ், ஆலோசகா் வெங்கடேசன்,பொருளாளா் ராஜூ ஆகியோா் கலந்து கொண்டு பூஜை செய்து சரக்கு வாகனத்தில் பொருட்களை ஏற்றி வழியனுப்பி வைத்தனா்.