சூரிய கிரகணத்தை கரூா் அரசு கலைக்கல்லூரியில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை காலை 8.07 மணி முதல் 11.14 மணி வரை வானில் தோன்றும் அறிவியல் நிகழ்வான வளைய சூரிய கிரகணத்தை பாதுகாப்பான முறையில் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் கரூா் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் இயற்பியல் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கழகம் வழங்கியுள்ள சாதனத்தை பயன்படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பாக கண்டுகளிக்க கல்லூரிக்கு வருமாறு கல்லூரி முதல்வா் தெரிவித்தாா்.