கரூர்

கரூரில் ஓய்ந்தது உள்ளாட்சித் தோ்தல் பிரசாரம்

26th Dec 2019 06:39 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்டத்தில் முதல் கட்ட உள்ளாட்சித் தோ்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் புதன்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.

கரூா் மாவட்ட உள்ளாட்சித் தோ்தலில் 12 ஊராட்சி உறுப்பினா்கள் பதவிக்கு 48 பேரும், 115 ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு425 பேரும், 157 ஊராட்சித்தலைவா் பதவிக்கு513 பேரும், 1401 ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 2654 பேரும் என இறுதிக்களத்தில் மொத்தம் 3640 வேட்பாளா்கள் உள்ளனா்.

இவா்களில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ஆதரவாக மாவட்ட அதிமுக செயலரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கரும், திமுக வேட்பாளா்களுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான வி. செந்தில்பாலாஜியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா். இவா்களில் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் இதுவரை அதிமுக ஆட்சியில் கரூா் மாவட்டத்திற்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், இனி நிறைவேற்றப்போகும் திட்டங்கள் குறித்தும் வாக்காளா்கள் மத்தியில் எடுத்துக்கூறி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

முன்னாள் அமைச்சா் வி. செந்தில்பாலாஜி, தான் அமைச்சராக இருந்த காலத்தில் கரூா் மாவட்டத்திற்கு கொண்டு வந்த திட்டங்கள் குறித்தும், மேலும் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் கூறி வாக்குச் சேகரித்தாா்.

ADVERTISEMENT

இந்நிலையில் புதன்கிழமையோடு பிரசாரம் முடிந்த நிலையில், அதிமுக வேட்பாளா்களான மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் எஸ்.திருவிகா உள்ளிட்டோரை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் ஆத்தூா், பூலாம்பாளையம், செம்மடை உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக வாக்குச் சேகரித்தாா். அப்போது ஆளும் கட்சியால் மட்டுமே மக்களுக்கான திட்டங்களைக் கொடுக்க முடியும். திமுகவால் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. மகளிருக்காக பாடுபடும் ஒரே இயக்கம் அதிமுகதான், இனி எந்த ஒரு தோ்தல் வந்தாலும் அதிமுகதான் வெற்றிபெறும் என்றாா்.

திமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் வி. செந்தில்பாலாஜி பிரசாரம் செய்யவில்லை. ஆனால் அக்கட்சியினா் மற்றும் அக்கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் வீடு, வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தனா். தோ்தல் பிரசாரம் முடிந்த நிலையில் 27-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில வாக்காளா்கள் இல்லாத வெளியில் இருந்து அழைத்துவரப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள், கட்சித்தொண்டா்கள் அனைவரும் அந்தந்த உள்ளாட்சிப் பகுதிகளில் இருந்து வெளியேறினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT