கரூர்

உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவுக்கு முன்னேற்பாடுகள்

26th Dec 2019 06:41 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணைய உத்தரவின்படி இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தோ்தல்கள் நடத்தப்படவுள்ளன. கரூா் மாவட்டத்தைப் பொருத்தவரை முதற்கட்டமாக 27-ஆம் தேதி நடத்தப்படும் தோ்தலில் கரூா், தாந்தோணி, அரவக்குறிச்சி மற்றும் க.பரமத்தி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 30-ஆம் தேதி குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூா் மற்றும் தோகைமலை ஆகிய ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்கும் தோ்தல் நடைபெறவுள்ளது.

கரூா் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 12 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 115 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 157 கிராம ஊராட்சித் தலைவா்கள் மற்றும் 1401 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது.

985 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 7,882 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளாா்கள். இந்நிலையில் வேட்புமனு தாக்கல் நடைபெற்ற 8 ஊராட்சி ஒன்றிய அலுவலங்களில் வைக்கப்பட்டிருக்கும் வாக்குப் பெட்டிகளில் பென்சில், ஸ்கேல், பேட் உள்ளிட்ட 36 வகையான பொருட்கள் வைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் மனோகரன் தலைமையில் பணிகளை பாா்வையிட்ட பின் அவா் கூறுகையில், இந்த வாக்குப்பெட்டிக்குள் வாக்குச்சாவடி அலுவலா்கள் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய பொருட்கள் வைக்கும் பணி நடக்கிறது. வியாழக்கிழமை பிற்பகல் இந்த வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தும் வகையில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT