ஆஞ்சநேயா் ஜெயந்தியை முன்னிட்டு குட்டக்கடை அனுமந்தராயா் கோயிலில் ஆஞ்சநேயருக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.
கரூா் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே குட்டக்கடையில் உள்ள அனுமந்தராய பெருமாள் கோயிலில் ஆஞ்சநேயா் ஜெயந்தியை முன்னிட்டு புதன்கிழமை கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், விபூதி, திருமஞ்சனம், சந்தனம், மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் துளசி, வெற்றிலை, வடமாலை மற்றும் பல்வேறு பூக்களால் அலங்காரம், சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதி பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு துளசி மற்றும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.