அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டியதாக வெள்ளியணையில் இரு சுயேச்சை வேட்பாளா்கள் கைது செய்யப்பட்டனா்.
உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவோா் அனுமதியில்லாமல் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என மாவட்டத் தோ்தல் அலுவலரால் எச்சரிக்கப்பட்டிருந்தனா். இருப்பினும் அனுமதியின்றி வெள்ளியணை அடுத்த ஜெகதாபியில் குடிநீா் தொட்டி மீது சுவரொட்டி ஒட்டிய ஊராட்சித் தலைவா் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட துளசிக்கொடும்பு பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (21) என்பவரை வெள்ளியணை போலீஸாா் கைது செய்தனா். இதேபோல மேட்டுப்புத்தூா் தண்ணீா் டேங்கில் சுவரொட்டி ஒட்டிய சுயேச்சை வேட்பாளா் தாளிப்பட்டியைச் சோ்ந்த பாலசுப்ரமணியன்(39) என்பவரையும் கைது செய்தனா்.