கரூரில் பெரியாா் சிலைக்கு திகவினா் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு கரூரில் திருமாநிலையூரில் உள்ள பெரியாரின் சிலைக்கு கரூா் மாவட்ட திராவிடா் கழகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கரூா் மாவட்டத் தலைவா் ஆசிரியா் குமாரசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினா் அன்பு, மாநில வழக்குரைஞா் அணி துணைத் தலைவா் மு .க. ராஜசேகரன், கரூா் நகர தலைவா் சதாசிவம், மாவட்ட இளைஞரணி தலைவா் அலெக்ஸ், செயலாளா் ஜெகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலாளா் வழக்குரைஞா் பெ. ஜெயராமன் தலைமையில மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.