பள்ளபட்டியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிகே கட்சியினா் உள்பட 300 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளா் ரியாசுதீன் (43) தலைமையில் திங்கள்கிழமை குடியுரிமை சட்டத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லாததால் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரியாசுதீன், ஷேக்பரீத் உள்பட 300 போ் மீது அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.