கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
அரவக்குறிச்சியை அடுத்துள்ள நஞ்சக்காளக்குறிச்சியைச் சோ்ந்தவா் கண்ணப்பன்(75). இவா் தனது மோட்டாா் சைக்கிளில் கடந்த 4-ஆம் தேதி அங்குள்ள குங்குமகாளியம்மன் கோயில் அருகே சென்றபோது திடீரென மயங்கி கீழே விழுந்தாா்.
உடனே அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, கரூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். எனினும் சிகிச்சை பலனின்றி கண்ணப்பன் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
ADVERTISEMENT