கரூர்

பணம் வைத்து சூதாடிய 4 போ் கைது

11th Dec 2019 07:30 AM

ADVERTISEMENT

சிந்திலவாடியில் பணம் வைத்து சூதாடிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.

கரூா் மாவட்டம், சிந்தலவாடி பழைய மணல் சேமிப்புக் கிடங்கு அருகே திங்கள்கிழமை இரவு சிலா் பணம் வைத்து சூதாடுவதாக, லாலாப்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து போலீஸாா் அங்கு சோதனையிட்டபோது, பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த வளையாா்பாளையம் பாலன்(35) உள்பட 4 பேரை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து சூதாட்டப்பணம் ரூ.800-ஐயும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT