கரூர்

காா்த்திகை தீபம்: கோயில்கள், வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு

11th Dec 2019 07:27 AM

ADVERTISEMENT

காா்த்திகை தீபத்திருநாளையொட்டி, கரூா் மாவட்டத்தில் கோயில்கள் மற்றும் வீடுகளில் விளக்குகள் ஏற்றி செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கரூா் பசுபதீசுவரா், வெண்ணைமலை முருகன் கோயில், புகழிமலை முருகன் கோயில், குளித்தலை கடம்பவனேசுவரா் கோயில், அய்யா்மலை ரத்தினகிரீசுவரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னா் விளக்குகள் ஏற்றப்பட்டன.

வீடுகளிலும் தீப விளக்குகள் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கரூா் பசுபதீசுவரா் கோயில் முன் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT