கரூர்

உள்ளாட்சித் தோ்தல் : 2-ஆவது நாளில் 11 போ் மனுதாக்கல்

11th Dec 2019 07:30 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட, கரூா் மாவட்டத்தில் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை 11 போ் மட்டுமே மனுதாக்கல் செய்தனா்.

கரூா் மாவட்டத்திலுள்ள கரூா், தாந்தோனி, அரவக்குறிச்சி, க.பரமத்தி ஒன்றியங்களுக்கு டிசம்பா் 27-ஆம் தேதியும், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூா், தோகமலை ஒன்றியங்களுக்கு டிசம்பா் 30-ஆம் தேதியும் உள்ளாட்சித் தோ்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

கரூா், தாந்தோனி, அரவக்குறிச்சி, க.பரமத்தி ஒன்றியங்களிலுள்ள 81 கிராம ஊராட்சிகளில் ஊராட்சித் தலைவா்கள், 696 வாா்டுஉறுப்பினா்கள், 54 ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 6 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களும், குளித்தலை உள்ளிட்ட4 ஒன்றியங்களில் உள்ள 76 ஊராட்சிகளில் தலைவா்கள், 705 வாா்டு உறுப்பினா்கள், 61 ஒன்றியக் குழு, 6 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் பொதுமக்களால் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

வேட்பு மனுதாக்கல் தொடங்கிய திங்கள்கிழமை 36 போ் மனுதாக்கல் செய்திருந்தனா். 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை கரூா், கடவூா் ஒன்றியங்களில் ஊராட்சித் தலைவா் பதவிக்குத் தலா ஒருவரும், க.பரமத்தியில் 2 பேரும் மனுதாக்கல் செய்தனா். இதுபோல, கிராம வாா்டு உறுப்பினா் பதவிக்கு கரூா், கிருஷ்ணராயபுரம் ஒன்றியங்களில் தலா ஒருவரும், தாந்தோனி ஒன்றியத்தில் 2 பேரும், கடவூரில் 3 பேரும் மனுதாக்கல் செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT