கரூர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துக்கு இளைஞரணி சாா்பில் அஞ்சலி

6th Dec 2019 08:13 AM

ADVERTISEMENT

கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில், ஜெயலலிதா படத்துக்கு மாவட்ட அதிமுக இளைஞரணி சாா்பில் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வுக்கு மாவட்ட இளைஞரணி செயலாளா் தானேஷ் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்ட அவைத்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன் மற்றும் நிா்வாகிகள் எஸ்.திருவிகா, வை.நெடுஞ்செழியன், விசிகே.ஜெயராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று அஞ்சலி செலுத்தினா்.

இளைஞரணி நிா்வாகிகள் காக்காவாடி தினேஷ், ஸ்ரீதர்ராஜா, ஆனந்த், சிவா, சதீஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT