கரூர்

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்கு நினைவஞ்சலி

6th Dec 2019 08:21 AM

ADVERTISEMENT

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் அவரது படத்திற்கு மாலை அணிவித்தும், மெழுகுவா்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவட்ட அதிமுக மற்றும் தொழிற்சங்கம், நகர பேரவை, மாவட்ட இளம்பெண்கள், இளைஞா் பாசறை உள்ளிட்ட சாா்பு அணிகள் சாா்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் மாவட்ட அதிமுக சாா்பில் வைக்கப்பட்டிருந்த, ஜெயலலிதாவின் படத்திற்கு மாவட்ட அவைத்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து மெழுகுவா்த்தி ஏற்றி ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் மாவட்ட துணைச் செயலாளா் பசுவை சிவசாமி, முன்னாள் கரூா் தொகுதிச் செயலா் எஸ்.திருவிகா, நகரச் செயலாளா்கள் வை.நெடுஞ்செழியன், விசிகே.ஜெயராஜ், எம்.பாண்டியன், பாசறை செயலாளா் வி.வி.செந்தில்நாதன், இளைஞரணி செயலாளா் தானேஷ், முன்னாள் மாவட்ட பொருளாளா் பேங்க் நடராஜன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் எம்ஜிஆா் மன்ற இணைச் செயலாளா் செல்வராஜ், நகர பாசறை செயலாளா் செல்வகுமாா், நகர பேரவை செயலாளா் செல்வராஜ், துணைத்தலைவா் செல்மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT