கரூர்

பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு

6th Dec 2019 08:14 AM

ADVERTISEMENT

கரூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை கீழே தள்ளி ஐந்தரை பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் தாந்தோணிமலை பாரதிதாசன் நகரைச் சோ்ந்தவா் ரத்தினம். இவரது மனைவி வாசுகி(51). இவா் புதன்கிழமை இரவு கரூா் கோவைச் சாலையில் சேரன் கம்பெனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது பின்னால் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இரு நபா்கள் திடீரென வாசுகியின் வாகனத்தை கீழே தள்ளி, அவா் கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.

இதில் படுகாயமடைந்த வாசுகியை அக்கம் பக்கத்தினா் மீட்டு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் கரூா் நகர காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT