கரூர்

விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்

29th Aug 2019 07:44 AM

ADVERTISEMENT

விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் பேசியது:
விநாயகர் சதுர்த்தியின்போது காவல்துறையினர் அறிவுறுத்திய வழித்தடங்களில் மட்டுமே சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்ல வேண்டும்.  களிமண்ணால் செய்யப்பட்ட சுடப்படாத சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும்.  சிலைகளுக்கு ரசாயன கலவை (பெயிண்ட்)  பூசக்கூடாது.  மேலும், சிலைகளை வழிபாட்டிற்கு பின்னர் நீர்நிலைகளில் கரைப்பதற்காக அறிவுறுத்தப்பட்ட காவிரியாற்றின் கரையிலுள்ள தவுட்டுப்பாளையம், வாங்கல், நெரூர், மாயனூர், குளித்தலையிலும், அமராவதி ஆற்றில் ராஜபுரம் பகுதியில் மட்டுமே கரைக்க வேண்டும்.  மேலும், குடிநீர் ஆதாரங்களை பாதிக்காத வகையில் குடிநீர் எடுக்கும் இடத்திலிருந்து 500 மீட்டருக்கு தொலைவில் சிலைகளை கரைக்க வேண்டும்.  ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட பிற நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 விழா தொடர்பாக கரூர் மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு விரிவான ஆலோனைக்கூட்டம் நடைபெற உள்ளது. விழா தொடர்புடைய நபர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்றார். 
கூட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) செல்வசுரபி, துணை காவல் கண்காணிப்பாளர்கள் கும்மராஜா, சுகுமார், கல்யாண்குமார்,  வருவாய் கோட்டாட்சியர்கள் சந்தியா (கரூர்), கணேஷ்(பொ) குளித்தலை, பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டாட்சியர்கள், தீயணைப்புத்துறை அலுவலர் மற்றும் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT