கரூர்

சாதனைகள் புரிய பிற மொழிகளையும் கற்க வேண்டும்

29th Aug 2019 07:45 AM

ADVERTISEMENT

சாதனைகள் புரிய பிற மொழிகளையும் கற்க வேண்டும் என்றார் யூத் இந்தியா அமைப்பின் தென்னிந்திய பொறுப்பாளர் பாண்டியராஜ்.
கரூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொன்காளியம்மன் கல்வியியல் கல்லூரி மற்றும் அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி, யூத் ஆப் இந்தியா சார்பில் ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் குறித்த கருத்தரங்கு கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.  
அரசு கல்வி நிறுவனத் தாளாளர் கோதை மற்றும் செயலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கல்லூரியின் முதல்வர் முனைவர் நடேசன் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு யூத் ஆப் இந்தியா ஒருங்கினைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் ஏனோக் ஜெபசிங் பெட்போர்டு ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக யூத் ஆப் இந்தியா அமைப்பின்  தென்னிந்திய பொறுப்பாளர் பாண்டியராஜ் பங்கேற்று பேசுகையில்,  தமிழக மாணவர்கள் இந்திய அளவில் சாதிக்க பிற மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும்.  தாய் தந்தையைப் போற்றிப் புகழ்வதே இந்திய பெண்களுக்கு முதல் கடமை. பாரத பிரதமரின் திட்டங்களை கல்லூரி மாணவிகள் சொந்த கிராமங்களில் செயல்படுத்த மத்திய அரசுக்கும், மக்களுக்கும் பாலமாகச் செயல்பட வேண்டும். தாய்மொழி,  தாய்நாடு என்பதை ஒவ்வொரு மாணவியின் உணர்வாக இருக்க வேண்டும். தமிழன் என்ற கர்வம் இருந்தால் எந்த இடத்திலும் சாதிக்க முடியும் என்றார். தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்களை மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் ரதிதேவி நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT