கரூர் அருகே வைக்கோல்போர் ஏற்றிய லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் லாரி முற்றிலும் சேதமடைந்தது.
கரூரை அடுத்த பஞ்சமாதேவியைச் சேர்ந்தவர் வாசுதேவன் (50). இவர் தனது லாரியில் அதே பகுதியில் அறுவடையான நெல் வயலில் இருந்து புதன்கிழமை பிற்பகல் வைக்கோல்போர் ஏற்றிக்கொண்டு திருப்பூரை நோக்கிப் புறப்பட்டார்.
லாரி சிறிது தூரம் சென்றவுடன் மேலே சென்ற மின்வயரில் உரசி வைக்கோல்போரில் திடீரென தீப்பற்றியது. இதைக் கண்ட வாசுதேவன் லாரியை விட்டு இறங்கி, கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை மேலும் பரவாதவாறு அணைத்தனர். இருப்பினும் லாரி முற்றிலும் சேதமடைந்தது.