கரூரில் இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் தாந்தோணிமலை சுங்ககேட் அடுத்த நாடார்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாரதி. இவரது மனைவி கலையரசி (25). இவர் அப்பகுதியில் கடந்த திங்கள்கிழமை நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன்(30), ஆனந்தராஜ்(23) ஆகியோர் தகராறு செய்தார்களாம். அப்போது கலையரசியை இருவரும் சேர்ந்து கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டலும் விடுத்தார்களாம். இதுதொடர்பாக கலையரசி அளித்த புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸார் வழக்குப்பதிந்து குணசேகரன், ஆனந்தராஜ் ஆகிய இருவரையும் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.