கரூர்

அரவக்குறிச்சி,  கருங்கல்பட்டி, பள்ளபட்டியில் நாளை மின்தடை

28th Aug 2019 10:21 AM

ADVERTISEMENT

பள்ளபட்டி, கருங்கல்பட்டி, அரவக்குறிச்சி பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.28) மின்சார நிறுத்தம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக கரூர் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளர் கு.சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
கரூர் மின்வாரிய கோட்டத்திற்கு உள்பட்ட பள்ளபட்டி, கருங்கல்பட்டி, அரவக்குறிச்சி ஆகிய துணை மின்நிலையங்களில் ஆக. 29ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான பள்ளபட்டி, அண்ணாநகர்,  தமிழ்நகர்,  மண்மாரி,  வேலம்பாடி, மோளையாண்டிப்பட்டி, பெரியசீத்தப்பட்டி, ரெங்கராஜ்நகர், செளந்திராபுரம், லிங்கமநாயக்கன்பட்டி மற்றும் ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, அம்மாபட்டி, முத்துக்கவுண்டனூர், 
வல்லப்பம்பட்டி, சந்தைப்பேட்டை, பண்ணப்பட்டி, இனுங்கனூர், வெடிகாரன்பட்டி, தலையாரிபட்டி, மொடக்கூர், குரும்பப்பட்டி,  பாறையூர்,  விராலிபட்டி,  நவமரத்துபட்டி,  புதுப்பட்டி,  குறிகாரன்வலசு மற்றும் அரவக்குறிச்சி,  கொத்தபாளையம்,  கரடிபட்டி, பெரியவலையபட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT