குறுவட்ட தடகளப் போட்டியில் கரூர் வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
கரூர் புகழூர் டிஎன்பிஎல் மைதானத்தில் அண்மையில் நடந்த கரூர் குறுவட்ட அளவிலான தடகளப்போட்டிகளில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டியில் வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவர்கள்195 புள்ளிகளும், மாணவிகள் பிரிவில் 113 புள்ளிகளும் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றன
ர். இதில் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் மாணவர் பி. ரித்தீஸ் தனிநபர் சாம்பியன் பட்டத்தையும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவர் டி. சஞ்சய்குமாரும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவர் எம். தருணும், எம்.எஸ். ஹரிசும், 17 வயதுக்குட்பட்டோர் மாணவிகள் பிரிவில் பி. கனிஷ்காவும் தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
பள்ளிக்குப் பெருமை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளி முதல்வர் வி. பழனியப்பன் வரவேற்றார். பள்ளித் தாளாளர் பிஎம்கே. பாண்டியன் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். பள்ளியின் தலைவர் பிஎம். கருப்பண்ணன், நிர்வாகி பிஎம்கே. பெரியசாமி, ஆலோசகர் பி. செல்வதுரை மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.