கரூர்

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

11th Aug 2019 04:49 AM

ADVERTISEMENT


சித்தலவாய் பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தார்.
 கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த குச்சிபட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி(55). விவசாயி. இவர் சித்தலவாய் பகுதியில் உள்ள மகாலிங்கம் என்பவரது வாழைத்தோட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது  திடீரென மின்சாரம் தடைபட்டதால் கிணற்று மோட்டாரில் உள்ள பிளக்கை சொருகியபோது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுதொடர்பாக மாயனூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT