மத்திய அரசைக்கண்டித்து சுவரொட்டி ஒட்டிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதைக் கண்டித்து குளித்தலையில் உள்ள பழைய சார்பதிவாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக குளித்தலை போலீஸார் வழக்குப்பதிந்து குளித்தலை காவிரி நகரைச் சேர்ந்த இஸ்மாயில்(40), என்ஜிஓ காலனியைச் சேர்ந்த செய்யதுமுஸ்தபா(19), கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்த இர்ஷத் முகமது ஆகியோரை கைது செய்தனர்.