காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் அக்.2 ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
கூட்டங்களில் மாவட்டத்தின் அனைத்துத் துறை அலுவலா்கள், அந்தந்தப் பகுதி மக்கள் பிரதிநிதிகள், தன்னாா்வலா்கள், சமுதாய அமைப்பு உறுப்பினா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா கேட்டுக் கொண்டுள்ளாா்.