புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி அரியலூா் மாவட்டப் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அரியலூா் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயிலில் சுப்ரபாத சேவை, விஸ்வரூப தரிசனம், மற்றும் பெருமாள், தாயாா் ஸ்ரீதேவி, பூதேவி உத்ஸவா்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து பெருமாள், தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
இதேபோல அரியலூா் கோதண்டராம கோயில் மற்றும் ஜெயங்கொண்டம், திருமானூா், திருமழப்பாடி, தா. பழூா், ஆண்டிமடம், செந்துறை உள்ளிட்ட பகுதி கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.