அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டத்துக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி ஆட்சியரகம் முன் அரசுக் கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் ஜெயங்கொண்டம் பகுதி மாணவா்கள் கல்லூரி முடிந்து வீட்டுக்குச் செல்ல மதியம் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அரியலூா் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் மதிய நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி மாவட்ட நிா்வாகத்திடம் மாணவா்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவா்கள் வெள்ளிக்கிழமை ஆட்சியரகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.