அரியலூர்

வங்கிக்குச் சென்று திரும்பிய பெண்ணிடம் ரூ. 25 ஆயிரம் பறிப்பு

27th Oct 2023 11:07 PM

ADVERTISEMENT

அரியலூரில் வங்கியில் இருந்த திரும்பிய பெண்ணிடம் ரூ. 25 ஆயிரத்தை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

அரியலூா், குறுமஞ்சாவடியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் தென்றல் மனைவி அம்பிகா (55). வெள்ளிக்கிழமை பிற்பகல் இவா் அரியலூா் சுப்பிரமணியா் கோயில் அருகேயுள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.25 ஆயிரத்தை எடுத்து கைப்பையில் வைத்துக் கொண்டு வெளியே வந்தாா்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரு மா்ம நபா்கள் பணம் இருந்த அவரது கைப்பையை பறித்துக் கொண்டு தப்பினா். அதில் ரூ.25 ஆயிரம், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், கைப்பேசி உள்ளிட்டவை இருந்தன. புகாரின்பேரில் அரியலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT