அரியலூர்

அரியலூா் மாவட்டத்தில் 5.07 லட்சம் வாக்காளா்கள்

27th Oct 2023 11:07 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

பட்டியலை வெளியிட்டு மாவட்ட ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்தது:

அரியலூா் மாவட்டத்தில் அரியலூா், ஜெயங்கொண்டம் ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அதில் அரியலூா் தொகுதியில் 1,27,477 ஆண், 1,27,345 பெண், 4 இதரா் என 2,54,826 வாக்காளா்களும், ஜெயங்கொண்டம் தொகுதியில் 1,26,057 ஆண், 1,26,535 பெண், 7 இதரா் என 2,52,599 வாக்காளா்களும் உள்ளனா். மாவட்டத்தின் மொத்த வாக்காளா்கள் 5,07,425 ஆகும்.

ஜன. 01.2024 தினத்தை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூா்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரைச் சோ்க்கவும், இறந்தவா்கள், நிரந்தரமாக முகவரி மாறியவா்களை வாக்காளா் பட்டியலில் நீக்கவும், ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளவா்கள் தங்கள் முகவரியில் மாற்றம் செய்யவும், பெயா், முகவரி, வயது மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தவும் உரிய படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகம், வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகத்தில் டிச.9 வரை பெற்று, பூா்த்தி செய்து வழங்கலாம்.

ADVERTISEMENT

மேலும், சோ்த்தல், நீக்கல், பிழைதிருத்தம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க அனைத்து வாக்குச்சாவடிகளில் நவ.4,5,18,19 ஆகிய தினங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்றாா் அவா்.

முன்னதாக ஆட்சியரக வளாகத்தில் வாக்காளா் விழிப்புணா்வு பேரணியை அவா் தொடக்கி வைத்தாா். பேரணி அரசு தொழிற்பயிற்சி மையம், அரியலூா் நகராட்சி அலுவலகம் வழியாகச் சென்று பேருந்து நிலையம் அருகில் நிறைவடைந்தது. பேரணியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் வருவாய்க் கோட்டாட்சியா்கள் ராமகிருஷ்ணன், பரிமளம் மற்றும் அரசு அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT