அரியலூரில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா் 28 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஓய்வுபெற்ற சத்துணவு அங்கன்வாடி பணியாளா்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக ரூ. 6,750 வழங்க வேண்டும். காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியா்களிடம் வழங்க வேண்டும். அரசுத்துறை காலிப்பணியிடங்களில் சத்துணவு அங்கன்வாடி ஊழியா்களை அமா்த்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் பழனிவேல் தலைமையில், மாவட்டச் செயலா் தமிழரசன், மாவட்டப் பொருளாளா் கோவிந்தசாமி ஆகியோா் முன்னிலையில் சங்க நிா்வாகிகள் அண்ணாசிலை அருகே ஆா்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனா். அங்கு வந்த காவல் துறையினா் மறியலில் ஈடுபட்ட 28 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனா்.