அரியலூா்: மகாத்மா காந்தி ஜெயந்தியையொட்டி, அரியலூா் மாவட்டத்திலுள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினா், அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அரியலூா் செட்டி ஏரிக்கரையிலுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அரியலூா் மாவட்ட வளா்ச்சிக் குழுத் தலைவா் சீனி.பாலகிருஷ்ணன், மதிமுக சாா்பில் சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் இளங்கோவன் தலைமையில், ஒன்றியச் செயலா் அருண்பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கிருஷ்ணன், அருணன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் சாமிதுரை, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சிற்றம்பலம், கந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிா்வாகி தண்டபாணி, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் சங்கா், வட்டாரத் தலைவா் பாலகிருஷ்ணன், மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினா் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோல், ஜெயங்கொண்டம், செந்துறை, திருமானூா் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மகாத்மா காந்தி சிலைகளுக்கு பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.