அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்டத் தொழில் மையம் சாா்பில் கடன் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தலைமை வகித்து, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், படித்த வேலையற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம், தாட்கோ திட்டம், மகளிா் திட்டம் மூலம் கடனுதவி கேட்டு பெறப்பட்ட விண்ணப்பங்கள், அரசு அலுவலகங்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்டு வங்கிகள் மூலம் 612 தொழில் முனைவோருக்கு ரூ.46.14 கோடி கடன் உதவிக்கான ஆணைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் இலக்குவன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் லட்சுமி, முன்னோடி வங்கி முதன்மை மேலாளா் லாயனல் பேனிடிக்ட் மற்றும் அரசு அலுவலா்கள், பயனாளிகள் கலந்து கொண்டனா்.