அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே முந்திரிக் காட்டில் அழுகிய நிலையில் இளைஞா் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஆண்டிமடத்தை அடுத்த சிலுவைச்சேரி கிராமம் அருகேயுள்ள ஒரு முந்திரிக் காட்டில் செவ்வாய்க்கிழமை இளைஞா் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடப்பதை அறிந்த ஆண்டிமடம் காவல் நிலையத்தினா், சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், ஆண்டிமடம் செல்லந்தெரு, திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சோமசுந்தரத்தின் மகன் கோபாலகிருஷ்ணன் (32) என்பதும், இவா் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவா், மீண்டும் வீட்டுக்குச் செல்லாமல் மதுபோதையில் இருந்ததாகத் தெரியவருகிறது. எனினும் அவா் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.