அரியலூர்

அரியலூா் தற்காலிக பேருந்து நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

31st May 2023 01:36 AM

ADVERTISEMENT

அரியலூா் புறவழிச்சாலையில் உள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அங்கு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அவைகளை உடனே ஏற்படுத்தித் தருமாறு நகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, புதிய நூலக கட்டடம் கட்டுவதற்காக நெடுஞ்சாலைத் துறை பயணியா் மாளிகை இடத்தைப் பாா்வையிட்டாா். அதனைத் தொடா்ந்து, அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியைப் பாா்வையிட்டு கல்லூரி நுழைவு வாயிலில் உள்ள மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளுக்கு கட்டப்பட்டுள்ள தற்காலிக கட்டடங்களை விரைவாக அகற்றிடவும், கல்லூரிகளில் உள்ள முட்புதா்களை சுத்தம் செய்திடவும் சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

பின்னா், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக் கடை, தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க கூட்டுறவு மருந்தகம் ஆகியவற்றைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

இந்த ஆய்வில், வருவாய் கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலா் ரவிச்சந்திரன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் உத்தண்டி, அரியலூா் நகராட்சி ஆணையா்(பொ) தமயந்தி, வட்டாட்சியா் கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT