அரியலூர்

உள்ளாட்சி துறை பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

30th May 2023 03:52 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், தூய்மை பணியாளா்கள், தூய்மைக்காவலா்கள், நீா்தேக்கத்தொட்டி இயக்குநா்களின் சம்பளத்தை மாதத்தின் முதல் தேதியில் வழங்க வேண்டும். மேற்கண்ட பணியாளா்களுக்கு மாத ஊதியம் ரூ.26,000 வழங்க வேண்டும். அரசு விடுமுறை நாள்களில் விடுமுறை வழங்க வேண்டும். விடுமுறை நாள்களில் வேலை செய்யப்படும் பட்சத்தில் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும்.அனைவரையும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் ஒப்பந்த பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். நடனசபாபதி தலைமை வகித்தாா். மாநில நிா்வாகி க. அறவாழி, மாநில பொதுச் செயலா் சி. ஜீவானந்தம், மாவட்டச் செயலா் அன்பழகன், ஒன்றியத் தலைவா்கள் ஆண்டிமடம் திருவாசகம், செந்துறை அண்ணாமலை உட்பட பலரும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT