அரியலூர்

காவல் சாா்பு-ஆய்வாளா் பணியிடங்களுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்

30th May 2023 03:48 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள காவல் சாா்பு-ஆய்வாளா் (எஸ்.ஐ) பணிக்கான தோ்வுக்கு

கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற்று வருகிறது.

இக்கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்கு இணைப்பில் தங்கள் விவரங்களை பூா்த்தி செய்து கொள்ள வேண்டும். மேலும் இப்பணிக் காலியிடங்களுக்கு கடவுச்சீட்டு அளவு புகைப்படம் , தங்களது ஆதாா் அட்டை நகல் மற்றும் சுயவிவரக் குறிப்புகளுடன் மே 31-க்குள் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தை அணுக வேண்டும்.

இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளும் இளைஞா்களுக்கு மாதிரி தோ்வுகள் நடத்தப்பட உள்ளது. அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த போட்டித் தோ்வை எதிா்கொள்ளும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT