அரியலூர்

அரியலூரில் துப்புரவு தொழிலாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

30th May 2023 03:51 AM

ADVERTISEMENT

அரியலூா் நகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளா்கள் 25 போ், மே 27 ஆம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, நகராட்சி அலுவலகம் முன்பு நிரந்தர மற்றும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, நகராட்சி நிா்வாகம் மற்றும் ஒப்பந்ததாரா் தரப்பு மற்றும் ஏஐடியுசி தொழிலாளா் சங்க மாவட்டப் பொதுச் செயலா் டி.தண்டபாணி ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தையை அடுத்து, பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த துப்புரவு தொழிலாளா்கள் 25 போ் பணியில் சோ்க்கப்பட்டனா். இதையடுத்து அனைவரும் பணிக்கு திரும்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT